
இலக்க தகடுகளில்லாத மோட்டார் சைக்கிளில் வருவோர் எம்.பிகளை சுட்டு கொல்லலாம். இது பாரதூரமான பிரச்சினையாகும் என மனுஷ நாணயக்கார எம்.பி சபையில் தெரிவித்தார்.
மேலும், இதன்படி யார் இவர்கள், எதற்காக வந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.
இது போன்ற சைக்கிளில் வந்தே லசந்த விக்ரமதுங்கவை சுட்டுக் கொன்றதாகவும் மனுஷ எம்.பி சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சம்பவங்கள் பாதுகாப்பு பிரச்சினையாகும்.
88, 89 ஆம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்தியது போன்ற நிலை ஏற்படலாம்.
எனவே உடனடியாக இது தொடர்பில் விரிவாக ஆராயுமாறு மேலும் அவர் கேட்டுக்கொண்டார்.