
கடந்த 4ஆம் தேதி சர்வதேச கண்ணிவெடிகள் செயற்பாட்டுத் தினத்தை முன்னிட்டு (DASH) சமூக நல்லிணக்கத்திற்கான டெல்வோன் உதவி (Delvon Assistance For Social Harmony) கிளிநொச்சி கரைச்சி பொது சந்தையில் கண்ணிவெடிகள் தொடர்பான விழிப்புணர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கண்ணிவெடிகள் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எண்ணக்கருவில் இவ்வாறான செயற்றிட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதேபோன்று கிராமங்கள் தோறும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.