
வட்டுக்கோட்டை, ஏப் 06
யாழ்.தொல்புரம் – வழக்கம்பரை பகுதியில் ஜோதிடர் ஒருவருடைய விலாசம் கேட்பதுபோல் பாசாங்கு செய்து பெண்ணின் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று வீட்டின் முன்னால் நின்றிருந்த பெண் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் யாரோ ஒரு ஜோதிடரின் பெயரை கூறி அவருடைய இடத்திற்கு எப்படி செல்வது என விசாரித்துள்ளனர்.
அதனை நம்பி பெண்ணும் அவர்களை நெருங்கியபோது அவர் அணிந்திருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இந்த நபர்கள் ஜோதிடம் பார்க்க செல்பவர்கள்போல் வாழை இலை உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.