நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திருகோணமலை – மூதூரிலும் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
இக்கவனயீர்ப்பு போராட்டம் மூதூர் பிரதான வீதியில் பொதுமக்களின் பங்குபற்றுதலோடு மாலை 4.30 – 5.30 மணிவரை இடம்பெற்றது.
இதன்போது விலைவாசி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள், எரிபொருட்களின் பற்றாக்குறை தொடர்பிலான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவண்ணம் கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கட்டிருந்தது.

