
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், பொதுமக்களின் துயரங்களுக்கு தொழிற்சங்கங்களின் ஒற்றுமையைக் காட்டுவதாக இருக்கும் என மையத்தின் ஒருங்கிணைப்பாளரான ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாது.
சுகாதார சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரண்டு மணி நேர போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.