கொழும்பு, ஏப் 5
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள், பேரணிகளை நடாத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும் இலங்கை கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றியும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
