வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்தவிருந்த நடமாடும் சேவை பிற்போடப்பட்டது

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் தேசிய மோட்டார் வாகன
போக்குவரத்து திணைக்களமும் இணைந்து நடமாடும் சேவை ஒன்றை ஏப்ரல் 09, 10ம்
திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டுள்ளதாக வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களிற்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில்,

தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த நடமாடும் சேவையானது பிற்போடப்பட்டுள்ளது
என்பதுடன், திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

அத்துடன் குறித்த நடமாடும் சேவையின் பொருட்டு ஆவணங்கள் கையளிக்க வேண்டியவர்கள் ஆவணங்களை அருகிலுள்ள பிரதேச செயலகங்களில் 28.04.2022 வரை கையளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *