
முல்லைத்தீவு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை பொதுமக்களுக்கு இயன்றளவு சேவையை வழங்க காத்திருப்பதோடு பொது மக்களிடமிருந்து பெறுமதியான முறைப்பாடுகளை எதிர்பார்க்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் 021 2290266 தொலைபேசி அழைப்பினூடாக தங்களது முறைப்பாட்டினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வழங்கும் முறைப்பாடுகள் தொடர்பில் இரகசியத்தன்மை பேணப்பட்டு அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.