
மும்பை, ஏப் 6
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதன்கிழமை 7.30 புனேயில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணித்தலைவர் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அணி சார்பாக சூரியதுமார் யாதவ் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தய அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணி சார்பாக கொல்கத்தா அணியின் தலைவர் வெங்கடேஸ்வர் ஐயர் 50 ஓட்டங்களையும், சுமின்ஸ் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.