
கொழும்பு, ஏப்ரல் 7: முக்கிய பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வகையில், விமான நிலையத்தின் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் நிறுத்தப்பட்டு விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டன என வெளியாகும் செய்திகளை விமான நிலையம், விமான சேவை நிறுவனம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 48 மணி நேரத்தில், உயரதிகாரிகளின் புறப்பாடு நடைமுறைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான தவறான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறோம். இலங்கையின் கண்ணியம், அதன் பயணிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.