
கொழும்பு, ஏப் 07
எரிபொருளுக்கான இந்திய கடனுதவி தொடர்ந்தும் செயற்பாட்டில் இருந்து வருவதாக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 36,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், 40,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய ஒருதொகுதி எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்திய உதவியின் கீழ் மொத்தமாக 270,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகளவான பல்வேறு வகை எரிபொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது