
கொழும்பு, ஏப் 07
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரம் மீதான வழக்கின் விசாரணைகளை நிறுத்துமாறு கோரி அவரால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மனு மீதான விசாரணைகளை வரும் ஜூன் 27 ஆம் திகதி முன்னெடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று (6) தீர்மானித்தது.