
கொழும்பு, ஏப் 07
இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் – ஹம்டி, “ஐ.நா. சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கிறது.
பொருளாதார மீட்சிக்குத் தேவையான அவசர நடவடிக்கைகளில் நாடு கவனம் செலுத்த அனுமதிக்கும் நெருக்கடிக்கு ஒரு அமைதியான தீர்வை நோக்கி செயற்பட கட்சிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்றும் ஹம்டி தெரிவித்துள்ளார்.