
ஜனாதிபதிப் பதவியில் இருந்து கோத்தாபய ராஜபக்ச ஒருபோதும் விலக மாட்டார் என்று ஆளும் தரப்பு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும்கட்சிப் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, எது நேர்ந்தாலும் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகமாட்டார் என்று தெரிவித்தார்.
அதேநேரம், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.