
கொழும்பு, ஏப் 07
அரசியல் நெருக்கடிக்கு அமைவாக பாராளுமன்றத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் போது அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஸ்ரீ பால டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.