
பலதரப்பு விவகாரம் மற்றும் கடன் நெருக்கடியைத் தீர்த்தல் என்பவற்றுக்காக ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் தலைமைப் பொருளியலாளர் பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஷர்னி குரே ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்து, இலங்கையின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கான வழிகாட்டல்களை வழங்குவார்கள் என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.