
பொருளாதார நெருக்கடி மிகுந்த தற்போதைய காலகட்டத்தில் பண்ணைக்குள் இரவு வேளையில் உள்நுழைந்த கொள்ளையர் குழு சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கோழிகளையும், நல் இன ஆடுகளையும் களவாடிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் ஏழாலை வடக்கு காளி கோயிலடியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
பண்ணைப் பொறுப்பாளர் இரவு தனது வீட்டிற்குச் சென்று விட்டு மறுநாள் காலையில் மீண்டும் வந்து பார்த்த போது பண்ணையில் திருட்டு இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது.
பண்ணைக்குள் புகுந்த திருடர்கள் அங்கு பொருத்தபட்டிருந்த சிசிரிவிக் கமரா இணைப்பைத் துண்டித்து, அங்கு கட்டப்பட்டிருந்த சுமார் 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 12 நல்லின ஆடுகளையும், கோழிக்கூடு பிரிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக விடப்பட்டிருந்த ஒவ்வொன்றும் தலா 8 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 50 கடக்நாத் கோழிகளையும் , மற்றும் கினிக் கோழிகளையும் களவாடிச் சென்றுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.