
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தார்.
இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பினர்.
எதிரணியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் சபைக்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.
நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது