நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெறும் நிலையில் வடக்கில் காணி அபகரிப்பு – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் ஸ்ரீதரன்

<!–

நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெறும் நிலையில் வடக்கில் காணி அபகரிப்பு – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் ஸ்ரீதரன் – Athavan News

வடக்கில் அனலைதீவிலும் முல்லைத்தீவிலும் நில அளவையில் ஈடுபட்டு நில அபகரிப்பு செய்யும் இராணுவத்தினரின் நடவடிக்கை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தது.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்று இடம்பெறும் விவாதத்தின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இதனை சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் மக்களும் இளைஞர்களும் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக போராடிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான தருணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் குற்றம் சாட்டினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *