
ஊழல் ஒழிப்புக் குழு மற்றும் அதன் செயலகம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்றும் இடம்பெற்றன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன ஆகியோரும் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியிருந்தனர்.