
ஒரு குடும்பத்தில் இருவர் அமைச்சராக இருக்க முடியாது என இன்றைய சபை அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமத்தின தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டை பொறுப்பேற்க நாம் தயாராக உள்ளோம். அதற்கான தீர்வுத் திட்டம் எம்மிடம் உள்ளது.
நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் கணவன் மனைவி ,ஒன்றாக ஒரே பிரிவில் வேலை செய்ய முடியாது என்ற சட்டம் உள்ளது.
அதே போலத் தான் ஒரு வீட்டில் இருவர் அமைச்சராக இருக்க முடியாது என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
அத்துடன் உடலில் உள்ள நோய்களை அறிவதற்கு குருதிப் பரிசோதனை செய்வதை போன்று, நாட்டை கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிப்பதற்கு குருதிப் பரிசோதனை போன்ற ஒரு விடயம் இருந்தால் நன்றாக இருக்கும்- என்றார்.