
பொதுமக்களின் போராட்டத்தை நியாப்படுத்த எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என ரஞ்சன் ராமநாயக்க கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் நியாயமானவை.
சிறையில் வாழ்க்கை கடினமானது ஆனால் மக்கள் தற்போது பெரும் துயரத்தினை அனுபவிக்கின்றனர்.
பொதுமக்களின் போராட்டம் நியாயப்படுத்தக்கூடியது.
எனினும், எனக்கு கதைப்பதற்கு அனுமதியில்லை நான் அறிக்கைகளை வெளியிடமுடியாது என தடை செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.