
தற்போதைய நெருக்கடி மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், பொது மக்களிடம் மன்னிப்புக் கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தற்போது பற்றாக்குறையாக உள்ள அடிப்படைத் தேவைகளையாவது அரசாங்கம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரவில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிர்வாகம் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு தீர்வுகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும்
தற்போதைய ஜனாதிபதி முறைமையை மாற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும், தேவையான மாற்றங்களை அமுல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க எதிர்க்கட்சிகள் முன்மொழிந்துள்ளதாகவும், அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீர்வை வழங்குவதற்குப் பதிலாக பொறுப்பையும் பிறர் மீது பழியையும் சுமத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
பொது மக்கள் தங்களுக்கு விருப்பமான ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு தேவையான சட்டங்களை இயற்றிய பின்னர் ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.