
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலுடன் உரையை ஆரம்பித்தார் வடிவேல் சுரேஸ்.
இன்றைய சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில்,
இந்த அரசு பம்மாத்து காட்டுகிறது. மலையக மக்களின் சாபம் உங்களை சும்மா விடாது.
தொழில் அமைச்சர் இல்லை, நீதி அமைச்சர் இல்லை, நிதி அமைச்சர் இல்லை.என்ன நாடு இது.
ஒருத்தர் கூட வரக் கூடாது இனி வாக்குக்கேட்டு.பச்சை துரோகம் செய்து விட்டீர்கள்.
சும்மா விட மாட்டோம்.பொறுமைக்கு இனி இடமில்லை – என்றார்.