நாட்டில் இடம்பெறும் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பு;தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை.

தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை சமீபகாலமாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் கலந்துகொண்டதை அவதானித்த பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதால், குழந்தைகளின் அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, விபத்துக்கள் அல்லது உடல் அல்லது உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் அது உறுதிபூண்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *