
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் குறிப்பிடப்படுகின்றவைகளுக்கு மாத்திரம்தான் ஆதரவை வழங்கியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று(07) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன்.
எனது கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டதுடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம், எரிபொருள் இல்லாமை, எரிவாயு இல்லாமை, மருந்துகள் தட்டுப்பாடு, அத்தியாவசிப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களுக்காக இத்தீர்மானத்தினை எடுத்துள்ளேன் என மேலும் தெரிவித்தார்.