
தலவாக்கலை, ஏப் 07
தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று தலவாக்கலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
எதிர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பூண்டுலோயா, நுவரெலியா மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் பேரணியாக தலவாக்கலை நகரை வந்தடைந்தனர். தலவாக்கலை பிரதான சுற்று வட்டத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.