
கொழும்பு, ஏப்ரல் : வரும் ஏப்ரல் 11, 12 ஆம் திகதிகள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுச் சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது வருஷத்தை முன்னிட்டு வரும் 13,14,15,16 ஆம் திகதிகள் விடுமுறைகளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 11,12 ஆம் திகதிகளும் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வரும் வாரம் முழுவதும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.