
தங்களது எதிர்ப்பை காட்டுவதற்காக தலவாக்கலைக்கு வந்த மலையக மக்களை வைத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர் என இலங்கை தொழிளாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனநாயக ரீதியான போராட்டங்களை வரவேற்கிறோம் ஆனால் வன்முறைகளுக்கு இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.