
தென்னிலங்கை அரசியலை அவதானித்து வந்த ஒருவன் என்ற அடிப்படையில் எனக்கு ஏற்படும் உணர்வானது மக்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடைபெற போவதாக தான் உணர்த்துகிறது என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான முன்னாள் பிரதிநிதியான ஹைதர் அலி எச்சரித்துள்ளார்.
எனினும் அவ்வாறான ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பது தான் எங்களுடைய பிரார்த்தனை. இலங்கையில் நீதித்துறை ராஜபக்சர்கள் வீடுகளில் இருந்து நீதி எழுதக்கூடிய நீதித்துறையாக தான் காணப்படுகிறது.
ஆங்காங்கே சில இடங்களில் மக்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் இப்போது இருக்கக்கூடிய நீதிச் சேவை ஆணைக்குழு என்று ஒன்றில்லை, பொலிஸ் சேவை ஆணைக்குழு என்று ஒன்றில்லை.
எனவே இந்த ஒரு சூழ்நிலையில் நீதியை நாம் எந்தவொரு தருணத்திலும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் சட்டத்தரணிகள் அனைவரும் சென்று சட்டமா அதிபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள்.
இப்படியானதொரு சூழ்நிலைகளை கண்டு நீதிமன்றம் தீர்ப்புகளை மாற்றி வழங்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. அது அல்லாமல் இலங்கையின் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கி மக்களுக்கு சார்பாக தீர்ப்பு கொடுக்கின்ற கணிப்பிற்கு நாம் வர முடியாது.
இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் அநீதிகள் மற்றும் நிதி மோசடி போன்ற குற்றச்சாட்டுக்களில் தண்டிக்கப்பட்டதாக பதிவாகவில்லை என கூறியுள்ளார்.