
கோட்டாபாயவின் அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் செய்த சேவையில் துளியளவும் செய்யாத ஜீவன் தொண்டமான் இன்று மக்களுக்கு முகண்கொடுக்க முடியாது முதுகெலும்பு பற்றி பேசுகிறார் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முழு தொண்டமான் பரம்பரையும் செய்யாத அபிவிருத்தியை பழனி திகாம்பரம் செய்திருந்தார். மலையத்தில் எங்கு பார்த்தாலும் திகாம்பரம் கட்டிய வீடுகள்தான் மக்களுக்கு தெரிகின்றன. வீடுகளை காட்டியது மாத்திரமல்ல மலையக சமூகத்தின் கல்வி,பொருளாதாரம் கலாசாரம் என அத்தனை துறைகளிலும் அபிவிருத்தியை முன்னெடுத்திருந்தார். வெறும் நான்கு ஆண்டுகளில் மலையகத்தில் மாற்றத்தை கொண்டுவந்திருந்தோம்.
நாங்கள் கட்டிய சில வீடுகளைத்தான் ஜீவன் தொண்டமானால் திறக்க முடிந்தது. சிலப் வீடுகளை கட்டித்தருகிறோம், ஆயிரம் ரூபா சம்பளத்தை தருகிறோம் , இருபது பேர்ச் காணியை தருகிறோம் என மக்களை வழமை போன்று ஏமாற்றி தொண்டமானின் அனுதாப வாக்கில் வெற்றிபெற்ற ஜீவன், கடந்த மூன்று ஆண்டுகளில் செய்துள்ள சேவையென்ன? இதற்கு மக்களிடம் தக்க பதில் உள்ளது. அதை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவார்கள்.
மக்களுக்கு முகங்கோமுகங்கொடுக்க முடியாது வெளியேற்றிவிட்டு இன்று முதுகெலும்பு பற்றி பேசுகின்றனர்.நாளையே அமைச்சு பதவி கிடைத்தால் சென்று ஒட்டிக்கொள்ளும் ஒட்டுண்ணிகள் இவர்களாகும். மலைகத்தில் முதுகெலும்புள்ள ஒரே தலைவர் திகாம்பரம் மாத்திரமே. அதனால் தாம் ஒட்டுமொத்த மலையக மக்களும் இன்று திகாம்பரத்துடம் இணைந்துள்ளனர்.
இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தன்னிசையாக பங்குபற்றியவர்களும். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது கலந்துகொண்டுள்ள மக்களை விமர்சிப்பவர்களுக்கு காலம் உரிய பதிலை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.