
ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் என்று எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒரு நாட்டுக்கு தேவையான உணவு, உடை மற்றும் உறையுள் என்பவற்றை உறுதிப்படுத்துவது நாட்டு தலைவரின் கடமையாகும்.
எனினும் ஜனாதிபதி இந்த விடயங்களில் தோல்வி கண்டுள்ளார். எனவேதான் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லவேண்டும் என்று கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஜனாதிபதி நாட்டு மக்களிடம் மன்னிப்பை கோரவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
19வது திருத்தத்தின் கீழ் அதிகாரங்கள், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு பகிரப்பட்டிருந்தது.
எனினும் 20வது திருத்தத்தின்கீழ் இந்த அனைத்து அதிகாரங்களையும் நிறைவேற்று அதிகாரங்களையும் ஜனாதிபதி எடுத்துக்கொண்டார். இதுவே இன்றைய பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் நிரபராதிகளாக விடுதலை செய்யப்படுகிறார்கள் என்ற காரணத்தை முன்வைத்து வரலாற்றில் முதன்முறையாக சட்டமா அதிபருக்கு எதிராக சட்டத்தரணிகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லச்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.