வன்னிப் பிரதேசங்களில் நிறைவான சேவை ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கவேண்டும் என தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நடைமுறைப்படுத்தவுள்ள 2021 ஆண்டிற்குரிய வலயங்களுக்கு இடையிலான ஆசிரிய இடமாற்றத்தில் நிபந்தனை அடிப்படையில் காலம் குறித்து இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்கள் குறித்த காலங்களைப் பூர்த்தி செய்துள்ளமையால் அவர்களின் நிரந்தர வலயத்திற்கு விடுவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் இன்று வடமாகாணக் கல்விப் பணிப்பாளரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவர்கள் நிபந்தனை அடிப்படையில் வன்னிப்பிரதேச மாணவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதனை ஏற்றுக்கொண்டு அங்கு சென்று சிறப்பான சேவை செய்துள்ளமையை மதித்து அவர்களுக்கு இம்முறை வழங்கப்படும் இடமாற்றத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்,வன்னிப் பிரதேசங்களில் உள்ள மாகாணப் பாடசாலைகளை மத்திய அரசு தேசிய பாடசாலைகளாக்கி அங்கு கடமையாற்றிய ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கு உள்வாங்கும் நடைமுறையை ஏற்றுக்கொள்ளாத மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு மாகாண ஆசிரிய இடமாற்ற நடைமுறைகளுக்கு ஏற்ப இடமாற்றம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இவர்கள் முறைப்படி மாகாண இடமாற்ற முறைகளுக்கு ஊடாக விண்ணப்பித்தவர்கள் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவும் கேட்டுக் கொண்டார்.
