
கொழும்பு, ஏப் 7
இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வியாழக்கிழமை கொழும்பு செட்டித் தெருவில் தங்கத்தின் விலை கணிசமான சரிவைக் கண்டது.
அதன்படி, 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.166,000, 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.180,000 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.175,800, 24 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை ரூ.190,000 பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.