
விடுதலைப் புலிகள் கொடுத்த திட்டம் தான் இலங்கையின் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
interim self governing authority என்ற பேச்சுவார்த்தையின் போது, புலிகள் அளித்த அந்த தீர்வு திட்டத்தை வைத்துகொண்டு ஒரு புதிய பாதையில் இலங்கை அடியெடுத்து வைக்க வேண்டும்.
இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியில் வர வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் உதவி இன்றி அதனை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திறந்த மனதோடு அமைதி பேச்சுவார்த்தை மூலமாக இந்நிலையை அணுகும் போதே நீடித்த அரசியல் தீர்வு எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.