
தெமட்டகொட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தை ட்ரக் சாரதிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் பல ஊர்திகளால் தலைமை அலுவலகத்தின் நுழைவாயிலை முற்றிலுமாக இடைமறித்து எவரும் பிரவேசிக்க முடியாத வகையில் தடை செய்திருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவியதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டதாகதாகவும் கூறப்படுகின்றது.