
கொழும்பு, ஏப் 7
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 35 ரூபாவினால் அதிகரித்திருந்தன.
இதனடிப்படையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதன் விலை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமாயின் 200 ரூபாவை விட உயரும் என்பதுடன், தமது தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.