
பொலன்னறுவை, ஏப் 7
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின்தடை காரணமாக பாரியளவில் பாதிப்பினை பொலன்னறுவை – மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தாலும் அதில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
டீசல் இல்லாத காரணத்தால் மற்ற ஜெனரேட்டரை இயக்க முடியவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மெழுகுவர்த்தி ஏந்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.