
யாழ்ப்பாணம், ஏப் 7
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் யாழ்.சங்கானையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு அருகில் தேங்காய் உடைக்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
பின்னர் பேரணி சித்தன்கேணி சந்தியூடாக சங்கானை நகரினை சென்றடைந்தது. அங்கும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாடத்தின்போது பொதுமக்கள் பதாதைகள் மற்றும் சுலோகங்களை தாங்கியிருந்தனர்.
யாழ் மாவட்ட அமைப்பாளர், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.