
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் ஒருவரையும், நிதியமைச்சின் செயலாளரையும் கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.