
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகமான அலரி மாளிகைக்கு முன்னால் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்களால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு கடும் மழை பெய்யத் தொடங்கியதால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மேலும், பாதுகாப்பு கடவையை உடைத்து அலரி மாளிக்கைக்குள் நுழைய முயற்சித்த நபரை, பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாக தாக்கப்பட்ட நபர் தெரிவித்தள்ளார்.
“ஏன் என்னை அடித்தீர்கள். ஏன் எனது கன்னத்தில் அறைந்தீர்கள் என குறித்த நபர் கோபத்துடன் கேள்வி கேட்டதுடன் நிலைமை சற்று பதற்றமடைந்துள்ளது.
அத்துடன் தங்களை தாக்க வேண்டாம் எனவும் நாட்டின் திருடர்களை துரத்தவே இங்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.