மட்டு.மாநகரசபையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தனிநபர் பிரேரணையாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசியலமைப்பில் இருந்து முற்றாக நீக்குதல் தொடர்பான பிரேரணை சபையின் நிறைவேற்றத்திற்காக முன்வைக்கப்பட்டது.
இது போது உறுப்பினர்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இறுதியில் இப் பிரேரணை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, சுயேட்சைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சபையில் அமர்ந்திருந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன மேற்படி பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

