
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை ஐ.நா பொதுச் சபை இடைநீக்கம் செய்துள்ளது.
93 நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், 24 நாடுகள் எதிராகவும், 58 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இதில் இந்தியாவும், இலங்கையும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.