
உத்தியோகபூர்வ வேலை நிமித்தம் காரணமாக தான் வெளிநாடு சென்றுள்ளதாக அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி அறிவித்துள்ளார்.
தற்போது சுவிட்சர்லாந்தில் இருக்கும் அவர் நேற்றைய தினம் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை கூறியுள்ளார்.
தான் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. தப்பிச் செல்ல எந்த காரணமும் இல்லை. தான் தற்போது பணி நிமித்தமாக சுவிட்சர்லாந்தில் உள்ளேன். தனது கடமைகள் சர்வதேச சமூகத்திடம் இருப்பதால், பணியின் தன்மைக்கேற்ப எந்த நாட்டுக்கும் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
தனது கடமைகளை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பல வருடங்களாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.