
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தனுஷ்கோடியில் மீட்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு தனுஷ்கோடி பகுதிக்கு சென்றுள்ளனர்.
2 வயது சிறுவன் உள்ளிட்ட நால்வர் தனுஷ்கோடி பகுதியில் கரையிறங்கிய நிலையில் தகவல் கிடைத்த மரைன் பொலிஸார் அவர்களை மரைன் பொலிஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதத்தில் மன்னார், வவுனியாவை சேர்ந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் இரு வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு தமிழ்நாட்டிற்கு அகதிகளாக புறப்பட்டு சென்ற போது தனுஷ்கோடி பகுதியில் மீட்கப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.