
பீஜிங், ஏப் 08
பூமியைக் கண்காணிக்கும் வகையில் ‘காவோபென்-303’ என்ற செயற்கைக்கோளை சீன விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் உருவாக்கினர்.
இந்த செயற்கைக்கோள், ‘லாங் மார்ச் -4சி’ ராக்கெட் மூலம் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து, விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள், திட்டமிட்டபடி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், நம்பகமானதும் நிலையானதுமான உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் ரேடார் படங்களை பெறவும், நிலப்பரப்பு, சுற்றுச்சூழல், வள கண்காணிப்பு மற்றும் அவசர கால பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு ஆகியவற்றுக்கான செயல்பாடு பயன்பாட்டு, தரவுகளை தரவும் பயன்படுத்தப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.