
இலங்கையில் டொலர் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையர்கள் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தங்குமிடத்திற்கான கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய செலவுகள் யாவும் டொலர்களில் செலுத்தப்பட வேண்டும் எனினும் உள்ளூர் வங்கிகள் கடன் வசதிகளை வழங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை ஆசிய மற்றும் உலக மட்டத்தில் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது, எனினும் டொலர் நெருக்கடி காரணமாக பல விளையாட்டு அமைப்புகளால் அவற்றுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இந்தநிலையில் டொலர் நெருக்கடியால், சர்வதேச ரீதியில், ஐந்து கரப்பந்துபோட்டிகள், நான்கு தடகளப்போட்டிகள், இரண்டு கால்பந்து போட்டிகள், மூன்று பூப்பந்துப்போட்டிகள், மூன்று பளுதூக்குதல், வலைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஜூடோ மற்றும் மல்யுத்தம் போன்ற பல சர்வதேச போட்டிகளை இந்த ஆண்டு இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.