வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சௌபாக்கிய நிலையத்தில் திருட்டு

வவுனியா – நொச்சிமோட்டை கிராம அலுவலக பிரிவிலுள்ள சாந்தசோலையில் அமைக்கப்பட்டு வரும் சௌபாக்கிய பால் உற்பத்தி நிலையத்தியத்தை உடைத்த திருடர்கள் அங்கிருந்த சீமெந்து பைகள் மற்றும் மின்விசிறிகள் மற்றும் அலுமினிய இரும்பு பார்கள் என்பனவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா சாந்தசோலை பிரதான கண்டி வீதியில் அமைக்கப்பட்டு வரும் சௌபாக்கிய பால் உற்பத்தி நிலையம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவில்லை. அதன் நிர்மானப்பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் ஊரடங்கு தினத்தன்று திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலைய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தின் நிர்மானப்பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட 9 பைக் சீமெந்துகள், 3 மின்விசிறிகள், அலுமினிய இரும்பு பொக்ஸ் பார் மற்றும் அதற்கான உபகரணகள் என்பனவற்றையும் திருடிச்சென்றுள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *