
கொழும்பு. ஏப் 08
நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பஸ்களில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, போதிய எரிபொருள் வழங்கப்படாவிட்டால், வரும் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் பஸ்களை இயக்க முடியாது.
நாட்டில் கடந்த சில நாட்களாக தனியார் பேருந்து தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால் தொலைதூர பஸ்களை இயக்க வாய்ப்பில்லை. எனவே, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பஸ்களில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.