
நாட்டில் கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ் கட்சிகளின் முக்கிய ஒன்றுகூடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்றுள்ளது.
தமிழத் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த, ஏனைய தமிழ்க் கட்சிகள் இணைந்து யாழில் சந்திப்போன்றை இன்று மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலவரம், மக்கள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அது தொடர்பான அறிக்கை ஒன்றை, அனைத்துக் கட்சிகள் ஒன்று சேர்ந்து வெளியிடவுள்ளன என தெரியவருகிறது .
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட அரசியில் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.